சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
1290 - தீது உற்றே எழு (பொதுப்பாடல்கள்) Songs from this thalam பொதுப்பாடல்கள்
1290 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1091 )
தீது உற்றே எழு
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானத் தானன ...... தந்ததான
தீதுற் றேயெழு ...... திங்களாலே
தீயைத் தூவிய ...... தென்றலாலே
போதுற் றாடும ...... நங்கனாலே
போதப் பேதைந ...... லங்கலாமோ
வேதத் தோனைமு ...... னிந்தகோவே
வேடப் பாவைவி ...... ரும்புமார்பா
ஓதச் சூதமெ ...... றிந்தவேலா
ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
Easy Version:
தீது உற்றே எழு(ம்) திங்களாலே
தீயைத் தூவிய தென்றலாலே
போது உற்று ஆடும் அனங்கனாலே
போதப் பேதை நலங்கலாமோ
வேதத்தோனை முனிந்த கோவே
வேடப் பாவை விரும்பும் மார்பா
ஓதச் சூதம் எறிந்த வேலா
ஊமைத் தேவர்கள் தம்பிரானே. Add (additional) Audio/Video Link
எழுகின்ற சந்திரனாலும்,
தீயைத் தூவிய தென்றலாலே ... நெருப்பை அள்ளி வீசுகின்ற
தென்றல் காற்றாலும்,
போது உற்று ஆடும் அனங்கனாலே ... தனது மலர்ப்
பாணங்களைச் செலுத்தி விளையாடும் மன்மதனாலும்,
போதப் பேதை நலங்கலாமோ ... அறிவுள்ள என் பெண் துயர்
உறலாமோ?
வேதத்தோனை முனிந்த கோவே ... வேத நாயகனாகிய பிரமனை
கோபித்த தலைவனே,
வேடப் பாவை விரும்பும் மார்பா ... வேடுவர் மகளான வள்ளி
விரும்புகின்ற திரு மார்பனே,
ஓதச் சூதம் எறிந்த வேலா ... கடலிடையே இருந்த மாமரத்தை
(சூரபத்மனை) பிளந்தெறிந்த வேலாயுதனே,
ஊமைத் தேவர்கள் தம்பிரானே. ... (வல்லவனாகிய உன் முன்னே)
வாயில்லாத ஊமைகளாய் உள்ள தேவர்களின் பெருமாளே.
1
Similar songs:
தானத் தானன ...... தந்ததான
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song